search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக்
    X
    தமிழ்நாடு பிரிமீயர் லீக்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா?- டூட்டி பேட்ரியாட்சுடன் இன்று மோதல்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.
    4-வது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல்லை அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் 14 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. திண்டுக்கல் டிராகன்ஸ் 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில்  உள்ளது. முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    காஞ்சி வீரன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் தலா 4 புள்ளியுடனும், நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் தலா 2 புள்ளியுடனும் உள்ளன. திருச்சி வாரியர்ஸ் 3 ஆட்டங்களில் தோற்று புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

    டிஎன்பிஎல் போட்டியின் 15-வது ‘லீக்’ ஆட்டம் நெல்லையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் பாபா அபரஜித் தலைமையிலான காஞ்சி வீரன்ஸ் - சுப்பிரமணிய சிவா தலைமையிலான டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    காஞ்சி வீரன்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்சிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது போட்டியில் காரைக்குடி காளையை 110 ரன் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்சை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

    இன்றைய ஆட்டத்தில் டூட்டி பேட்ரிட்யாட்சை தோற்கடித்தது. காஞ்சி வீரன்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக டிஎன்பிஎல் கோப்பையை வென்ற டூட்டி பேட்ரியாட்ஸ் அணி 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மதுரை பாந்தர்சிடம் 9 விக்கெட் வீழ்த்தியாசத்தில் தோற்றது. 2-வது போட்டியில் கோவை கிங்சை 6 ரன்னில் வென்றது. 3-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 40 ரன்னில் தோற்றது.
    Next Story
    ×