search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இம்ரான் கான் - சுனில் கவாஸ்கர்
    X
    இம்ரான் கான் - சுனில் கவாஸ்கர்

    இம்ரான் கான் சொன்னதால்தான் இப்படி செய்தேன்.. -சுனில் கவாஸ்கர்

    இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இம்ரான்கானிடம் உரையாடியது குறித்து தெரிவித்துள்ளார். அது என்ன என்பதை பார்ப்போம்.
    இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், இந்திய கிரிக்கெட் அணி குறித்தும், தேர்வுக் குழு குறித்தும் வெளிப்படையான கருத்துக்களை கூறி வருகின்றார்.

    அந்த வகையில் நேற்று கோலியை மீண்டும் கேப்டனாக அறிவித்ததற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.  இதையடுத்து பேசிய சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

    கடந்த 1986ம் ஆண்டு இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது நானும், இம்ரான் கானும் மதிய உணவு சாப்பிட சென்றோம். அந்த நேரத்தில்தான் நான் அவரிடம் ஓய்வு குறித்து பேசினேன்.

    கவாஸ்கருடன் உரையாடும் இம்ரான் கான்

    இந்த தொடருடன் என் ஓய்வை அறிவிக்கப்போகிறேன் என இம்ரானிடம் கூறினேன். உடனே அவர், இப்போது ஓய்வை கூறாதீர்கள் என எனக்கு பதில் அளித்தார். இம்ரான் கான் மேலும் கூறுகையில், 'பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

    அங்கு வந்து இந்தியாவை தோற்கடிப்பதுதான் என் நோக்கம். அப்போது இந்திய அணியில் நீங்கள் இல்லை என்றால் சரியாக இருக்காது' என்றார்.  அதற்கு நான், இந்த இங்கிலாந்து தொடரின் முடிவில் பாகிஸ்தான் தொடர் குறித்த முடிவு வரவில்லை என்றால், நான் ஓய்வு குறித்து அறிவித்து விடுவேன் என கூறினேன்.

    மறுநாளே பாகிஸ்தான் தொடருக்கான அறிவிப்பு வெளியானதால், நான் ஓய்வினை அறிவிக்கவில்லை. அவரிடம் சொன்னபடி ஓய்வினை  தள்ளிப்போட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




    Next Story
    ×