search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாயிண்ட் எடுக்கும் முனைப்பில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள்
    X
    பாயிண்ட் எடுக்கும் முனைப்பில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள்

    புரோ கபடி - தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பாட்னா பைரட்ஸ்

    புரோ கபடி லீக் தொடரில் மும்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பாட்னா பைரட்ஸ் அணி.
    மும்பை:

    இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 7-வது புரோ கபடி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் நேற்று நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரட்சை எதிர்கொண்டது.

    தொடக்கத்தில் தமிழ் தலைவாஸ் அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனாலும், பாட்னா பைரட்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு சரிவில் இருந்து மீண்டனர்.

    இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் சேர்த்ததால் ஆட்டம் பல முறை சமநிலையானது. முதல் பாதியில் இரு அணிகளும் 11-11 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகித்தன.

    ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 23-24 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது.

    3-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். முந்தைய ஆட்டத்திலும் தமிழ் தலைவாஸ் அணி இதேபோல் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தபாங் டெல்லியிடம் தோல்வி கண்டது. பாட்னா பைரட்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

    மற்றொரு ஆட்டத்தில், பெங்கால் வாரியர்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதின. இதில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பெங்கால் வாரியர்ஸ் அணி 43-23 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பால்டனை எளிதில் வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது.
    Next Story
    ×