search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோயிப் அக்தர் முகமது அமிர்
    X
    சோயிப் அக்தர் முகமது அமிர்

    முகமது அமிரின் டெஸ்ட் போட்டி ஓய்வு முடிவு முற்றிலும் ஏமாற்றம் அளிக்கிறது: சோயிப் அக்தர்

    27 வயதில் முகமது அமிரின் டெஸ்ட் போட்டி ஓய்வு முடிவு முற்றிலும் ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர் இரண்டு நாட்களுக்கு முன் திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 27 வயதில் உச்சக்கட்ட பார்மில் இருக்கும்போது ஓய்வு முடிவை அறிவித்தபோது முன்னாள் வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    இந்நிலையில் அமிரின் ஓய்வு முடிவு மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘முகமது அமிர் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது ஓய்வு முடிவை அறிவித்திருப்பது முற்றிலும் ஏமாற்றமாக உள்ளது.

    இந்த நேரம் பாகிஸ்தான் அணிக்கு அமிர் திரும்ப செலுத்த வேண்டிய நேரம். தற்போது பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. அமிர் சிறப்பாக பந்து வீசி அணிக்கு மிகப்பெரிய வெற்றிகளை தேடிக்கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. நான் காயத்தில் இருந்தபோதிலும் கூட பாகிஸ்தான் அணி இங்கிலாந்திலும், நியூசிலாந்திலும் தொடரை கைப்பற்ற உதவியாக இருந்தேன்.

    பாகிஸ்தான் அணியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் 27 வயதில் எப்படி ஓய்வு பெற முடியும்?. மேட்ச் பிக்சிங் விவாரத்தில் இருந்து அவரை மீட்டு மீண்டும் தேசிய அணியில் சேர்க்க பாகிஸ்தான் அணி பாடுபட்டது. தற்போது அவர் சூப்பர் பார்மில் உள்ளார். ஆனால் ஓய்வு பெற்றுவிட்டார்.

    அமிரைத் தொடர்ந்து ஹசன் அலி, வஹாப் ரியாஸ், ஜுனைத் கான் ஆகியோர் ஓய்வு முடிவை எடுப்பார்கள்’’ என்றார்.
    Next Story
    ×