search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி மகிழ்ச்சியில் கோவை அணி வீரர்கள்.
    X
    வெற்றி மகிழ்ச்சியில் கோவை அணி வீரர்கள்.

    திருச்சி அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் வெற்றி

    திருச்சி வாரியர்ஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் வெற்றி பெற்றது.
    திருநெல்வேலி:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திருச்சி வாரியர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் அபினவ் முகுந்த் மற்றும் ஷாருக்கான் களமிறங்கினர்.

    முகுந்த் 5 ரன்னிலும், ஷாருக்கான் 11 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் ரன்ஞன் பால் 34 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரரான ரங்கராஜன் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அந்தோனி தாஸ் 13 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 32 ரன்கள் விளாசினார். இறுதியில் கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. திருச்சி வாரியர்ஸ் அணி தரப்பில் விக்னேஷ் மற்றும் பொய்யாமொழி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய திருச்சி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் முகுந்த் 2 ரன்னிலும், அரவிந்த் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய ஆதித்யா மற்றும் கணேஷ் அணியை சரிவிலிருந்து சற்று மீட்டனர். ஆனாலும்  ஆதித்யா 27 ரன்களிலும், கணேஷ் 24 ரன்களிலும்  ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் கோவை வீரர்களின் திறமையான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இறுதியில் திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் திருச்சி வாரியர்ஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

    கோவை கிங்ஸ் தரப்பில் நடராஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.   
    Next Story
    ×