search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி மகிழ்ச்சியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்.
    X
    வெற்றி மகிழ்ச்சியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: காரைக்குடி அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி

    காரைக்குடி அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
    திருநெல்வேலி:

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணிகள் மோதிய தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 9-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி கங்கா ஸ்ரீதர் ராஜூ, கோபிநாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.  தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் அரைசதம் அடித்தனர்.

    அணியின் ஸ்கோர் 108 ரன்கள் எடுத்திருக்கும்போது கங்கா ஸ்ரீதர் ராஜூ 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ராஜூ அவுட்டாகிய சிறிது நேரத்தில் கோபிநாத் 40 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கவுசிக் காந்தி 21 பந்தில் 32 ரன்கள் விளாசினார். இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. 
    விக்கெட் கீப்பர் ஆரிப் ரன்அவுட் செய்த காட்சி.
    இதையடுத்து 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணியின் தொடக்க வீரர்கள் ஆதித்யா 2 ரன்னிலும் கேப்டன் அனிருதா 12 ரன்களிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் வந்த வீரர்களும் சேப்பாக் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். சற்று நிலைத்து நின்று ஆடிய அந்த அணியில் ஜாஜகான் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் காரைக்குடி காளை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 121 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றது. சேப்பாக் அணி தரப்பில் அந்த அணியின் பெரியசாமி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
    Next Story
    ×