search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6 விக்கெட் வீழ்த்திய கிறிஸ் வோக்ஸ்
    X
    6 விக்கெட் வீழ்த்திய கிறிஸ் வோக்ஸ்

    அயர்லாந்தை 38 ரன்னில் சுருட்டி அமோக வெற்றி பெற்றது இங்கிலாந்து

    லார்ட்ஸ் டெஸ்டில் அயர்லாந்து வெற்றி பெற்று விடுமோ என்று ரசிகர்கள் அச்சப்பட்ட நிலையில், இங்கிலாந்து அவர்களை 38 ரன்னில் சுருட்டி அமோக வெற்றி பெற்றது.
    இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளரான டிம் முர்டாக்கின் (5 விக்கெட்) பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல்  இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 85 ரன்னில் சுருண்டது.

    பின்னர் பேட்டிங் செய்த அயர்லாந்து முதல் இன்னிங்சில் 207 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து 112 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜேக் லீச் (92), ஜேசன் ராய் (72), ஜோ ரூட் (31), சாம் குர்ரான் (37) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 303 ரன்கள் குவித்தது.

    இதனால் இங்கிலாந்து 191 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இன்றைய 3-வது நாளில் 192 ரன்கள் அடித்துவிட்டால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுவிடலாம் என்று அயர்லாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

    ஸ்டம்பை பறிகொடுத்த அயர்லாந்து பேட்ஸ்மேன் முர்டாக்

    ஆனால் இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் விராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல் அயர்லாந்து விக்கெட்டுக்கள் சரிந்தன. தொடக்க வீரர் ஜேம்ஸ் மெக்கொல்லம் மட்டும் இரட்டை இலக்கமான 11 ரன்கள் அடிக்க மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில்  வெளியேறினர்.

    இதனால் 15.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 38 ரன்னில் சுருண்டு படுமோசமான வகையில் தோல்வியை சந்தித்தது அயர்லாந்து. பிராட் 8 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸ் 7.4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    ஸ்டூவர்ட் பிராட்

    முதல் இன்னிங்சில் 85 ரன்னில் சுருண்ட இங்கிலாந்து, அதற்கு பழி தீர்க்கும் வகையில் அயர்லாந்து 38 ரன்னில் சுருட்டி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×