search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்பந்து
    X
    கால்பந்து

    14 நாடுகள் பங்கேற்பு - சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து சென்னையில் 3-ந்தேதி தொடக்கம்

    14 நாடுகள் பங்கேற்கும் சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டி சென்னையில் ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
    சென்னை:

    சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

    இந்தப்போட்டி ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    மனவளர்ச்சி குன்றியவருக்கான இந்தப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரியா, இந்தோனேசியா, மாலத்தீவு, வங்காளதேசம், சீனா, மலேசியா, மியான்மர், எகிப்து, கொரியா, பாகிஸ்தான், ரஷியா, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 14 நாடுகள் பங்கேற்கின்றன.

    ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் விளையாடுகின்றன. இந்திய சிறப்பு ஒலிம்பிக், ஆசிய பசிபிக் சிறப்பு ஒலிம்பிக், அரிமா சங்கம் (மாவட்டம் 324 ஏ6) ஆகியவை இணைந்து இந்தப்போட்டியை நடத்துகிறது.

    மருத்துவத்தைவிட இது மாதிரியான விளையாட்டுகள் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு சிறப்பாக அமையும் என்று சிறப்பு ஒலிம்பிக் ஆசிய பசிபிக் சீனியர் விளையாட்டு மேலாளர் நாகராஜன் தெரிவித்தார். பேட்டியின் போது அரிமா சங்க நிர்வாகியும், கோல்டன் ஈகிள் விளையாட்டு அகாடமி தலைவருமான ஆர்.ஏழுமலை உடன் இருந்தார்.
    Next Story
    ×