search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்ட்டின் கப்தில்
    X
    மார்ட்டின் கப்தில்

    எனது கிரிக்கெட் வாழ்க்கையில் அந்த நாள் மிகவும் சிறந்த மற்றும் மோசமான நாள்: மார்ட்டின் கப்தில்

    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கான நாள் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சிறந்த மற்றும் மோசமான நாள் என்கிறார் மார்ட்டின் கப்தில்.
    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 14-ந்தேதி நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. ஆட்டம் ‘டை’யில் முடிந்த நிலையில், சூப்பர் ஓவரும் ‘டை’யில் முடிந்தது.

    இதனால் அதிக பவுண்டரிகள் அடித்த அணிக்கு சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது. சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நீசம் முதல் ஐந்து பந்தில் 14 ரன்கள் அடித்துவிட்டார். கடைசி பந்தை மார்ட்டின் கப்தில் எதிர்கொண்டார்.

    இந்த பந்தில் இரண்டு ரன்கள் அடித்தால் நியூசிலாந்து கோப்பையை வெல்லும் என்ற நிலை இருந்தது. ஆனால் மார்ட்டின் கப்தில் 2-வது ரன்னுக்கு ஓடும்போது ரன்அவுட் ஆனார். இதனால் போட்டி ‘டை’யில் முடிந்தது. அத்துடன் நியூசிலாந்து உலகக்கோப்பை கனவு தொடர்ந்து 2-வது முறையாக தகர்ந்து போனது.

    இந்நிலையில் உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற நாள் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த மற்றும் மோசமான நாள் என்னு மார்ட்டின் கப்தில் தெரிவித்துள்ளார்.

    மார்ட்டின் கப்தில்

    இதுகுறித்து மார்ட்டின் கப்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘‘நம்பமுடியாத வகையில் முடிவடைந்த லார்ட்ஸ் இறுதிப் போட்டி முடிந்த பின்னரும், இப்படி ஒரு முடிவா? என்பதை ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது.

    இறுதிப்போட்டி நடைபெற்ற நாள் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு மிகவும் மோசமான மற்றும் சிறந்த நாள். வித்தியாசமான ஏராளமான எமோசன்ஸ். ஆனால், நியூசிலாந்து அணிக்காக சக வீரர்களுடன் இணைந்து விளையாடியது பெருமையளிக்கிறது. ஆதரவாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி’’ என்று பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×