search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜடேஜா, விராட் கோலி
    X
    ஜடேஜா, விராட் கோலி

    டெஸ்ட் தரவரிசை - கோலி, ஜடேஜா அசத்தல்

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் போட்டியின் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் முத்திரை பதித்துள்ளனர்.
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.

    பேட்டிங்கில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 913 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    புஜாரா (இந்தியா) 881 புள்ளியுடன் 3-வது இடத்திலும், ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா) 857 புள்ளியுடன் 4-வது இடத்திலும், நிக்கோலஸ் (நியூசிலாந்து) 5-வது இடத்திலும் உள்ளனர்.

    பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர் கும்மின்ஸ் 878 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளார். ஆண்டர்சன் (இங்கிலாந்து) 862 புள்ளியுடன் 2-வது இடத்திலும், ரபடா (தென் ஆப்பிரிக்கா) 851 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இந்திய வீரர்களில் ஜடேஜா 794 புள்ளியுடன் 6-வது இடத்திலும், அஸ்வின் 763 புள்ளியுடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.

    ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜாவுக்கு 3-வது இடம் கிடைத்து உள்ளது. ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) முதல் இடத்திலும், சகிப்-அல்-ஹசன் (வங்காள தேசம்) 2-வது இடத்திலும் உள்ளனர்.

    அணிகள் தர வரிசையில் இந்தியா 113 புள்ளியுடன் மீண்டும் முதல் இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து (111 புள்ளி), 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (108 புள்ளி) 3-வது இடத்திலும் உள்ளன.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகள் 4 முதல் 9-வது இடத்திலும் உள்ளன.
    Next Story
    ×