என் மலர்

  செய்திகள்

  5 விக்கெட் வீழ்த்திய அலெக்சாண்டர்
  X
  5 விக்கெட் வீழ்த்திய அலெக்சாண்டர்

  அலெக்சாண்டர் அபார பந்துவீச்சு - திருச்சி வாரியர்ஸ் அணியை 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் நடைபெற்ற போட்டியில் அலெக்சாண்டரின் அபார பந்துவீச்சால் திருச்சி வாரியர்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி.
  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிய தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 6-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி கேப்டன் சாய் கிஷோர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

  இதையடுத்து, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுசிக் காந்தியும், கங்கா ஸ்ரீதர் ராஜுவும் இறங்கினர்.

  கவுசிக் காந்தி ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய கோபிநாத், ராஜுவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் 50 ரன் சேர்த்தனர். கோபிநாத் 37 ரன்னிலும், ராஜு 26 ரன்னிலும் அவுட்டாகினர். தொடர்ந்து இறங்கிய முருகன் அஷ்வின் 18 ரன்னிலும், சசிதேவ் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

  ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹரிஷ் குமார் 23 பந்தில் 4 சிக்சர் உள்பட 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்தது.

  திருச்சி வாரியர்ஸ் அணிச் சார்பில் சவரண்குமார் 2 விக்கெட்டும், விக்னேஷ், பொய்யாமொழி, சய் கிஷோர், கண்ணன் விக்னேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

  இதையடுத்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே தனது அபாரமான பந்துவீச்சால் திருச்சி அணி வீரர்களை நிலைகுலைய செய்தார் அலெக்சாண்டர். இதனால் அந்த அணியின் முக்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

  திருச்சி அணியின் சார்பில் ஆதித்யா பரூவா 29 ரன்னும், மணி பாரதி 14 ரன்னும் எடுத்தனர். இறுதியில், திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 107 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  சேப்பாக் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய அலெக்சாண்டர் 4 ஓவரில் 9 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். பெரியசாமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  Next Story
  ×