search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குருணால் பாண்டியா
    X
    குருணால் பாண்டியா

    கோலியின் சீரான ஆட்டம், எம்எஸ் டோனியின் பொறுமை: நான் விரும்புவது இதுதான் என்கிறார் குருணால் பாண்டியா

    கோலி சீராக எப்படி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார், எம்எஸ் டோனி எப்படி பொறுமையாக செயல்படுகிறார் என்பதை கற்றுக் கொள்ள ஆசை என்கிறார் குருணால் பாண்டியா.
    இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான குருணால் பாண்டியா இடம் பிடித்துள்ளார்.

    2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது வெளி உலகத்திற்கு தெரியவந்தார். அதன்பின் தனது அயராத முயற்சியால் இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்தார். ஒன்றிரண்டு டி20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

    அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதால் இந்திய அணி அதிக அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. இதனால் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க விரும்புகிறார். மேலும் விராட் கோலி, டோனியிடம் இருந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து குருணால் பாண்டியா கூறுகையில் ‘‘மும்பை அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டதுதான் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனை. அதில் இருந்து நான் எனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டேன்.

    கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்திய ‘ஏ’ அணி சுற்றுப் பயணம் மிகவும் உதவிக்கரமாக உள்ளது.  நான் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சென்று விளையாடியுள்ளேன். சீனியர் அணிக்காக செல்லும்போது இது சாதகமாக இருக்கும்.  வெளிநாடு சென்றுள்ளதால் தற்போது விளையாடும்போது அன்னிய நாட்டு சூழ்நிலை போன்று தெரியாது.

    நான் உண்மையிலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த வருடம் இன்னும் ஏராளமான போட்டிகள் உள்ளன. இறுதியாக களம் இறங்கிய பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

    குருணால் பாண்டியா

    விராட் கோலியிடம் இருந்து, அவர் எப்படி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மூன்று வகை கிரிக்கெட்டிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் திறமையை உள்ளீர்த்துக் கொள்ள முயற்சி செய்ய விரும்புகிறேன்.

    கிரிக்கெட்டில் உலகின் மிகப்பெரிய பினிஷர் எம்எஸ் டோனி. என்னைப் பொறுத்த வரைக்கும் இந்திய கிரிக்கெட்டிலும், உலகக் கிரிக்கெட்டிலும் எம்எஸ் டோனியை விட சிறந்த பினிஷர் இல்லை. போட்டியை சரியாக கணிக்கும் திறமை மற்றும் பொறுமை ஆகியற்றை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×