என் மலர்

  செய்திகள்

  பொல்லார்ட் சுனில் நரைன்
  X
  பொல்லார்ட் சுனில் நரைன்

  இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்ட், சுனில் நரைன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்ட், சுனில் நரைன் இடம் பிடித்துள்ளனர்.
  விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

  இந்தியா- வெஸட் இண்டீஸ் அணி மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 3-ந்தேதி நடக்கிறது. 6-ந்தேதி வரை 20 ஓவர் தொடர் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை ஒருநாள் தொடர் நடக்கிறது. டெஸ்ட் தொடர் 22-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 3-ந்தேதி வரை நடக்கிறது.

  இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 3 நிலைக்கான அணியும் தேர்வு செய்யப்பட்டது.

  இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு 20 ஓவர் போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

  பொல்லார்ட், சுனில் நரைன் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் இடம் பெற்று உள்ளனர். சுழற்பந்து வீரரான சுனில் நரைன் 20 ஓவர் சர்வதேச போட்டியில் விளையாடி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது.

  20 ஓவர் உலககோப்பையை கருத்தில் கொண்டு பொல்லார்ட், சுனில் நரைனுக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக தேர்வு குழுவின் இடைக்கால தலைவர் ராபர்ட் ஹெய்ன்ஸ் தெரிவித்து உள்ளார்.

  அந்த்ரே ரஸல்

  தொடக்க அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் கனடா போட்டியில் ஆடுவதால் இந்த தொடரில் இடம் பெறவில்லை. ஆல் ரவுண்டர் ஆந்தர ரஸ்சல் அணியில் இடம் பெற்றுள்ளார். ஆனால் அவர் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். புதுமுக விக்கெட் கீப்பராக அந்தோணி பிராம்ளே தேர்வாகி இருக்கிறார்.

  இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு 20 ஓவர் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம்:-

  கார்லோஸ் பிராத்வைட் (கேப்டன்), ஜான் கேம்ப்பெல், எவின் லிவிஸ், ஹெட்மையர், பொல்லார்ட், நிக்கோலஸ் பூரன், பொவேல், அந்த்ரே ரஸல், காட்ரெல், கீமோ பால், சுனில் நரைன், அந்தோணி பிராம்ளே, கேரி பியாரே, ஒஷானே தாமஸ்.
  Next Story
  ×