search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுமித் நகல்
    X
    சுமித் நகல்

    முதன்முறையாக ஏடிபி 500 டென்னிஸ் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றார் சுமித் நகல்

    இந்தியாவின் 21 வயது இளம் வீரரான சுமித் நகல் முதன்முறையாக ஏடிபி 500 டென்னிஸ் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றார்.
    கிராண்ட் ஸ்லாம், ஏடிபி மாஸ்டர்ஸ் தொடர்களுக்கு அடுத்தப்படியாக டென்னிஸில் கருதப்படுவது ஏடிபி 500 போட்டி. ஹம்பர்க் ஓபனுக்கான தகுதிச் சுற்று நடைபெற்று வந்தது. இதில் இந்தியாவின் இளம் வீரரான சுமித் நகல் பங்கேற்றார்.

    நேற்று உலகத் தரவரிசையில் 128-வது இடத்திலும், இத்தொடருக்கான தரநிலையில் 3-வது இடம் பெற்றவருமான ஸ்பெயின் நாட்டின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போகினாவை எதிர்கொண்டார். இதில் சுமித் நகல் 6-4, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஹம்பர்க் யூரோப்பியன் ஓபனில் விளையாட தகுதிப் பெற்றா்.

    சேலஞ்சர் லெவல் டென்னிஸ் போட்டியில் 7 தொடர்களில் ஐந்து முறை அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய சுமித் நகல், 2018-ல் ஏடிபி 250 டாட்டா ஓபனில் விளையாட தகுதிப் பெற்றார்.
    Next Story
    ×