search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுவர் தர்மசேனா
    X
    நடுவர் தர்மசேனா

    உலகக்கோப்பை இறுதி போட்டி - தவறை ஒப்புக் கொண்ட நடுவர் தர்மசேனா

    உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் 6 ரன் வழங்கியது தவறு என நடுவர் தர்மசேனா ஒப்புக்கொண்டுள்ளார்.
    உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கடைசி கட்டத்தில் 2-வது ரன்னுக்கு ஓடிய போது, பீல்டர் எறிந்த பந்து அவரது பேட்டில் பட்டு பவுண்டரிக்கு ஓடியது. இதனால் நடுவர் தர்மசேனா (இலங்கை) 6 ரன் வழங்கினார்.

    இதையடுத்து ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவரை சென்று ஒரு வழியாக இங்கிலாந்து உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் 2-வது ரன்னை பூர்த்தி செய்யாத நிலையில் பந்து பேட்டில் பட்டு பவுண்டரிக்கு ஓடியதால் அந்த ஓவர் த்ரோவுக்கு 5 ரன் தான் வழங்கியிருக்க வேண்டும், 6 ரன் வழங்கியது நடுவரின் தவறு என்று விமர்சனம் கிளம்பியது.

    இந்த நிலையில் நடுவர் தர்மசேனா தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார். டி.வி. ரீப்ளேயை பார்த்த போது 5 ரன் தான் கொடுத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்ததாகவும், இருப்பினும் சக நடுவருடன் ஆலோசித்த பிறகே 6 ரன் வழங்கியதாகவும், இதனால் வருத்தம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×