search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக்
    X
    தமிழ்நாடு பிரிமீயர் லீக்

    டிஎன்பிஎல்: கோவை கிங்ஸ் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் கோவை கிங்ஸ் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ்.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் 4-வது போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ் - விபி காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. லைகா கோவை கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி காஞ்சி அணியின் விஷால், முகிலேஷ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விஷால் 1 ரன்னிலும், முகிலேஷ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். 1 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்ததால் அந்த அணி தத்தளித்தது.

    அதன்பின் 3-வது விக்கெட்டுக்கு சுரேஷ் லோகேஷ்வர் - பாபா அபரஜித் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சுரேஷ் லோகேஷ்வர் 31 ரன்னும், பாபா அபரஜித் 28 ரன்களும் சேர்த்தனர். சஞ்சய் யாதவ் 23 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார்.

    பிரான்சிஸ் ரோகின்ஸ் 7 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 25 ரன்கள் விளாச காஞ்சி வீரன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. கோவை அணி சார்பில் மணிகண்டன் 3 விக்கெட்டும், நடராஜன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×