search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனி எம்எஸ்கே பிரசாத்
    X
    எம்எஸ் டோனி எம்எஸ்கே பிரசாத்

    ஓய்வு என்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயம்: எம்எஸ் டோனி குறித்து தேர்வுக்குழு தலைவர் பதில்

    ஓய்வு என்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயம், டோனி போன்ற லெஜண்ட்-களுக்கு எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது தெரியும் என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடரில் எம்எஸ் டோனிக்கு இடம் கிடைக்குமா? ஓய்வு பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால், இந்திய அணி அறிவிக்கும் முன்பே நான் இந்தத் தொடரில் பங்கேற்கமாட்டேன் என்று டோனி தெரிவித்தார். இதனால் டோனி குறித்து தேர்வின்போது பரிசீலிக்கவில்லை.

    இந்திய அணி அறிவித்த பின்னர், எம்எஸ் டோனி குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அப்போது ஓய்வு முடிவு என்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயம் என்று பதில் தெரிவித்தார். இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் தொடரில் எம்எஸ் டோனி பங்கேற்கமாட்டார். இதுகுறித்து அவர் தெளிவுப்படுத்திவிட்டார்.

    உலகக்கோப்பை வரை ஒரு உறுதியான திட்டம் நாங்கள் வைத்திருந்தோம். உலகக்கோப்பைக்குப் பின் அதில் இருந்த சற்று விலகி வந்துள்ளோம். ரிஷப் பந்த் சிறந்த வீரராக வளர அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுக்க முன் வந்துள்ளோம். தற்போது இதுதான் எங்களது திட்டம்.

    எதிர்காலம் குறித்து அவரிடம் நான் ஆலோசனை செய்தேன். ஓய்வு என்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயம். எம்எஸ் டோனி போன்ற லெஜண்டிற்கு எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால், எதிர்காலத்திற்கான திட்டம் குறித்து ஆராயப்படும். அது தேர்வாளர்களின் கைகளில் உள்ளது’’ என்றார்.
    Next Story
    ×