என் மலர்

  செய்திகள்

  தெலுங்கு டைட்டன்ஸ் அணி வீரரை, மும்பை அணியினர் மடக்கி பிடித்த காட்சி.
  X
  தெலுங்கு டைட்டன்ஸ் அணி வீரரை, மும்பை அணியினர் மடக்கி பிடித்த காட்சி.

  புரோ கபடி போட்டி - வெற்றியுடன் தொடங்கியது மும்பை அணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புரோ கபடியில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி மும்பை அணி வெற்றியுடன் தொடங்கியது.
  ஐதராபாத்:

  7-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ், 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், மும்பை (யு மும்பா), தமிழ் தலைவாஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி. யோத்தா, பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி ஆகிய 12 அணிகள் பங்கேற்றுள்ளன.

  ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறைமோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும். எஞ்சிய 2 அணிகள் எது? என்பது வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று மூலம் முடிவு செய்யப்படும்.

  நேற்றிரவு நடந்த முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி, தெலுங்கு டைட்டன்சை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி முதல் பாதியில் 18-10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. அதே முன்னிலையை கடைசி வினாடி வரை தக்க வைத்துக் கொண்டது. முடிவில் மும்பை அணி 31-25 என்ற புள்ளி கணக்கில் உள்ளூர் அணியான தெலுங்கு டைட்டன்சை சாய்த்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சிங், ரைடு மூலம் 10 புள்ளிகள் சேகரித்தார்.

  மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 34-32 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்சை வீழ்த்தியது. இதில் ஒரு கட்டத்தில் 25-25 என்று சமநிலை கண்டாலும் அதன் பிறகு பெங்களூரு புல்சின் கை ஓங்கி விட்டது. ரைடு செல்வதில் பவான் செரவாத்தும் (9 புள்ளி), டேக்கிள்ஸ் யுக்தியில் அமித் ஷிரானும் (5 புள்ளி) பெங்களூரு அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர்.

  இதே ஸ்டேடியத்தில் இன்றும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்-குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

  இரவு 8.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைட்டன்சுடன் மல்லுகட்டுகிறது. கடந்த 2 சீசன்களில் முத்திரை பதிக்க தவறிய தமிழ் தலைவாஸ் அணி இந்த முறை அசத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
  Next Story
  ×