என் மலர்

  செய்திகள்

  நெய்மர்
  X
  நெய்மர்

  நெய்மருக்காக 6 வீரர்களில் இரண்டு பேரை எடுத்துக் கொள்ளுங்கள்: பிஎஸ்ஜி-க்கு பார்சிலோனா தூது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெய்மருக்காக 90 மில்லியன் பவுண்டுடன் 6 வீரர்களில் இரண்டு பேரைத் தருகிறோம் என பார்சிலோனா பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு தூதுவிட்டுள்ளது.
  பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாறினார். பார்சிலோனா அவரை விட விரும்பவில்லை. உலகின் முதன்முறையாக அதிகப்படியான விலை கொடுத்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அவரை வாங்கியது.

  பிஎஸ்ஜி அணிக்குச் சென்றாலும் நெய்மரை எண்ணம் எல்லாம் பார்சிலோனாவையே சுற்றிக் கொண்டிருந்தது. இதனால் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்ப விரும்பினார். பார்சிலோனாவும் நெய்மரை வாங்க விரும்புகிறது.

  நெய்மருக்காக பிஎஸ்ஜி பார்சிலோனாவுக்கு 222 மில்லியன் பவுண்டு கொடுத்தது. அந்த பணத்தை எப்படியாவது திரும்ப பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறது. கடந்த வாரம்தான் கிரிஸ்மானை சுமார் 120 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்தது.

  இதனால் பிஎஸ்ஜி கேட்கும் 300 மில்லியன் பவுண்டை கொடுக்க பார்சிலோனா விரும்பவில்லை. அதற்குப் பதிலாக 90 மில்லியன் பவுண்டு தருகிறோம். அத்துடன் பிலிப்பே கவுட்டினோ, ஒஸ்மானே டெம்பேள், இவான் ராகிடிக், நெல்சன் செமேடோ, மால்கம் மற்றும் சாமுவேல் உமிதிதி ஆகிய ஆறு பேர்களில் இரண்டு பேரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று பார்சிலோனா தற்போது தூதுவிட்டுள்ளது. இதற்கு பிஎஸ்ஜி வளைந்து கொடுக்குமா? என்பது கேள்விக்குறிதான்.
  Next Story
  ×