என் மலர்

  செய்திகள்

  பெய்லிஸ்
  X
  பெய்லிஸ்

  கொல்கத்தா நைட் ரைடர்ஸை பின்னுக்குத் தள்ளி பெய்லிஸை ஒப்பந்தம் செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் டிரேவொர் பெய்லிஸை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
  ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் 8 அணிகளில் ஒன்றான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். அவரது பயிற்சியின் கீழ் அந்த அணி 2016-ம் ஆண்டில் சாம்பியன் கோப்பையை வென்றது.

  இந்த ஆண்டில் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறினாலும், 4-வது இடத்தையே பிடித்தது. இந்த நிலையில் அணி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து பரஸ்பர பேச்சுவார்த்தை அடிப்படையில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டாம் மூடி விலகி இருக்கிறார்.

  இதைத் தொடர்ந்து ஐதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிரேவொர் பெய்லிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஆவார். ஆஷஸ் தொடர் நிறைவடைந்ததும் இங்கிலாந்து அணியுடனான அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது.

  டாம் மூடி

  பெய்லிஸ் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக 2012 முதல் 2015 வரை இருந்துள்ளார். அப்போது  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. பிக்பாஷ் கிரிக்கெட்டில் சிட்னி சிக்சர்ஸ் அணி வாகை சூடியது. அவரது வெற்றிகரமான பயணம் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியையும் முன்னெடுத்து செல்லும் என்று நம்புவதாக ஐதராபாத் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கல்லீஸ் சமீபத்தில் தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் பெய்லிஸை தலைமை பயிற்சியாளராக நியமிக்க அந்த அணி ஆர்வம் காட்டி வந்தது. அதற்குள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அவரை ஒப்பந்தம் செய்துவிட்டது.
  Next Story
  ×