என் மலர்

  செய்திகள்

  பிசிசிஐ
  X
  பிசிசிஐ

  உலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்தள்ளது.
  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ நாடுகளில் நடைபெற்றது. உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றில் வெற்றி வாகை சூடி உலகக்கோப்பையில் விளையாட ஆப்கானிஸ்தான் தகுதி பெற்றது. மற்ற 9 அணிகளை காட்டிலும் ஆப்கானிஸ்தான் வலிமை குறைந்த அணிதான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

  ஆனால் ஏதாவது ஒரு அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு மட்டுமே சற்று நெருக்கடி கொடுத்தது. 7 அணிகளுக்கு மழையால் ஒரு புள்ளி கிடைத்தபோதிலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லாமல் போனது.

  9 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து பூஜ்ஜியமாக வெளியேறி ஏமாற்றம் அளித்தது. தரம் வாய்ந்த அணிகளை எதிர்கொள்ள வேண்டுமென்றால், உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவது அவசியம். ஆப்கானிஸ்தானில் அதற்கு வாய்ப்பில்லை.

  அந்த அணி இந்தியா உள்ள மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது. மேலும் பிசிசிஐ ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறது. இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் சிறப்பாக உள்ளதால், ஆப்கானிஸ்தான் வீரர்கள் அதில் விளையாடினால் திறமை மேம்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் போர்டு திட்டம்போடுகிறது.

  இதனால் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு பிசிசிஐ-க்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகக்குழு, இதை நிராகரித்துவிட்டது.

  இதுகுறித்து நிர்வாகக்குழு வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘பிசிசிஐ-யால் ஏற்பாடு செய்யப்படும் உள்ளூர் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், ஆப்கானிஸ்தான் வீரர்களின் முகாமுக்கும், பயிற்சிக்கும் எந்தவித தடையும் விதிக்கவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளது.
  Next Story
  ×