search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிவி சிந்து
    X
    பிவி சிந்து

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: ஒரு மணி நேரம் போராடி காலிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து

    இந்தோனேசியா ஓபனில் பிவி சிந்து தரநிலை பெறாத வீராங்கனைக்கு எதிராக ஒருமணி நேரம் பேராடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து 2-வது சுற்றில் தரநிலை பெறாத டென்மார்க்கின் மியா பிளிச்வெல்ட்-ஐ எதிர்கொண்டார். தரநிலை பெறாத டென்மார்க் வீராங்கனையை பிவி சிந்து எளிதாக வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் மியா பிளிச்வெல்ட் பிவி சிந்துவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். முதல் செட்டை 21-14 எனக் கைப்பற்றிய பிவி சிந்து 2-வது செட்டை 17-21 என இழந்தார். அதன்பின் சுதாரித்துக் கொண்ட பிவி சிந்து 3-வது செட்டை 21-11 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார். பிவி சிந்து இந்த வெற்றியை பெற ஒரு மணி நேரம் இரண்டு நிமிடங்கள் தேவைப்பட்டது.

    முதல் செட்டில் மியா 6-3 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் பிவி சிந்து சிறப்பாக விளையாடி ஸ்கோரை சமன் செய்தார். இறுதியில் பிவி சிந்து 21-14 என முதல் செட்டை கைப்பற்றினார்.

    2-வது செட்டில் மியா 9-5, 10-7 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் பிவி சிந்து 3 புள்ளிகள் பெற ஸ்கோரை 10-10 என சமநிலைப் பெற்றது. அதன்பின் பிவி சிந்து பல தவறுகள் செய்ய 2-வது செட்டை இழந்தார்.
    Next Story
    ×