search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    பயிற்சியாளர் விஷயத்தில் விராட் கோலி ஏதும் சொல்ல முடியாது: பிசிசிஐ செக்

    தலைமை பயிற்சியாளர் தேர்வு விஷயத்தில் கேப்டன் விராட் கோலி ஏதும் கூற முடியாது என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ரவி சாஸ்திரி. இவரது பதவிக் காலம் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது.  தலைமை பயிற்சியாளரை பதவிக்கு விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ கோரியுள்ளது. ரவி சாஸ்திரியும் மீண்டும் விண்ணப்பக்க வேண்டும்.

    மொத்தமாக வரவேற்ற விண்ணப்பங்களை கபில்தேவ் தலைமையிலான குழு ஆராய்ந்து தகுதியான விண்ணப்பங்களை பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்யும். அதன்பின் பிசிசிஐ தலைமை பயிற்சியாளரை யார் என்பதை அறிவிக்கும்.

    தலைமை பயிற்சியாளரை நியமிப்பதற்கு முன் இந்திய அணி கேப்டனின் கருத்து கேட்கப்படும். கடந்த முறை ரவி சாஸ்திரியை நியமிக்கும்போது விராட் கோலியிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆனால் இந்த முறை விராட் கோலியிடம் கருத்து கேட்கப்படமாட்டாது என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    கடந்த முறை அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டால் கேப்டனாகிய தனக்கும் அல்லது அணிக்கும் உள்ள சங்கடங்கள் குறித்து எடுத்துக் கூறினார். ஆனால் இந்த முறை கபில்தேவ் தலைமையிலான குழு அவரிடம் ஏதும் கேட்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலியை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டார்.

    துணைப் பயிற்சியாளர்களை இந்த முறை தேர்வுக்குழுவுதான் முடிவு செய்யும். வழக்கமாக தலைமை பயிற்சியாளர்களுக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருந்தோம். தற்போது தலைமை பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட்ட பிறகு, துணைப் பயிற்சியாளர்கின் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
    Next Story
    ×