search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்குலி லஷ்மண் சச்சின்
    X
    கங்குலி லஷ்மண் சச்சின்

    தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான வேலைகளை கவனிப்பது கங்குலி குழு அல்ல

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில் தேவ் தலைமையிலான குழு களம் இறங்குகிறது.
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில் தேவ் தலைமையிலான குழு களம் இறங்குகிறது.

    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக திகழ்ந்தவர்கள் சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, லஷ்மண். இவர்கள் மூன்று பேரையும் கொண்டு கிரிக்கெட் ஆலோசகர் குழு ஒன்றை பிசிசிஐ உருவாக்கியது. இவர்கள் சம்பளம் வாங்காமல் பிசிசிஐ-க்கு உதவி வந்தனர்.

    கடந்த முறை தலைமை பயிற்சியாளர் தேர்வு செய்யும்போது வரவேற்கப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து தகுதியான நபர்களிடம்  நேர்க்காணல் நடத்தி, யாரை தலைமை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்ற பரிந்துரை பட்டியலை பிசிசிஐ-க்கு இந்த குழு அளித்தது. அதனடிப்படையில் ரவி சாஸதிரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

    தற்போது இரட்டை ஆதாயம் தரும் பிரச்சனை தொடர்பான மூன்று பேரும் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் இருந்து விலகினர். அப்போது கபில் தேவ் தலைமையிலான அன்ஷுமான் கேய்க்வார்ட், சாந்தா ராமசாமி ஆகியோர் கொண்ட தற்காலிக குழுவை பிசிசிஐ அமைத்தது. இந்த குழு ஏற்கனவே பெண்கள் அணிக்கான பயிற்சியாளரை தேர்வு செய்தது.

    தற்போது கங்குலி தலைமையிலான குழு இல்லாததால் கபில் தேவ் தலைமையிலான குழுவிடம் இந்த பணியை செய்துத் தருமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டது. இதற்கு கபில் தேவ் தலைமையிலான குழு சம்மதம் தெரிவித்துள்ளது.

    ஆகவே, இந்த குழுதான் தற்போது இந்திய அணிக்கான தலைமை பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர் பதவிக்கு தகுயானவர்களை நேர்காணல் செய்து பட்டியலை பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்யும்.
    Next Story
    ×