search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டீவ் வாக்
    X
    ஸ்டீவ் வாக்

    டோனி இல்லை என்றால்.. -ஸ்டீவ் வாக் சொன்னது என்ன?

    இந்திய அணியின் அனுபவ வீரரான டோனி குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம்.
    உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி சுற்றில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய டோனியின் ரன் அவுட் தான் மிக முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்திய அணியின் அனுபவ வீரரான டோனி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கூறியதாவது:

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் ஜீனியஸ் நிச்சயம் டோனிதான். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்திய அணியை வெற்றிப் பெற வைத்திருப்பார்.

    நாம் அனைவரும் அதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் சிறந்த வீரராக இல்லை என்றால், அவர் என்ன செய்கிறார் என நீங்கள் சந்தேகப்பட்டிருக்க மாட்டீர்கள். மிடில் ஆர்டரில் அவர் இருக்கும் வரை அனைவருக்கும் விளையாட வாய்ப்பளிக்கிறார்.

    எம்எஸ் டோனி

    நான் இன்னும் அவரை நம்புகிறேன். இந்தியாவுக்காக பல போட்டிகளில் விளையாடி வென்றுக் கொடுத்துள்ளார். அனைத்துப் போட்டிகளிலுமே ஒரே மாதிரியான ஆட்டத்தைதான் வெளிப்படுத்துகிறார்.

    டோனி இல்லை என்றால் பல போட்டிகளில் இந்திய அணி வென்றிருக்க வாய்ப்பே இல்லை. ஒருநாள் போட்டிகளில் சேசிங்கில் மற்றவர்களைவிட அவர் சிறப்பாகவே விளையாடி இருக்கிறார். விராட் கோலியின் கேப்டன்சியிலும் எந்த தவறும் இல்லை.

    அதேபோல் நியூசிலாந்து அணியும் சிறப்பாக விளையாடியது. கேன் வில்லியம்சனும், ராய் டெய்லரும்தான் அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    Next Story
    ×