search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள்
    X
    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள்

    உலக கோப்பை 2019: இறுதிப் போட்டிக்கான டிக்கெட் இத்தனை லட்சமா? -ரசிகர்கள் அதிர்ச்சி

    உலக கோப்பையின் இறுதிப் போட்டியை காணும் டிக்கெட்டின் விற்பனை விலை லட்சக்கணக்கில் உள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவுன் மோதி வெற்றிப் பெற்றது. இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

    இதனையடுத்து இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளன. லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

    லார்ட்ஸ் மைதானத்தில் ரசிகர்கள்

    உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 27 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து அணி விளையாட உள்ளதால் உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் நேரில் காண ஆர்வத்துடன் உள்ளனர்.

    இந்நிலையில் இதனைப் பயன்படுத்தி பலர் மக்களிடம் பணம் பறிக்க முயன்று வருகின்றனர். ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையத்தளப் பக்கத்தில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டாலும், ஐசிசி அங்கீகரித்த முகமைகளும் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.

    இவை பிரீமியம் டிக்கெட்டுகளை ரூ.13.78 லட்சத்திற்கும், அடுத்தப்படியாக ரூ.11.76 லட்சத்திற்கும் விற்கின்றன. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதற்கிடையே, டிக்கெட் மறுவிற்பனையை பொறுத்தவரை தங்களால் அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் மூலம் மட்டுமே டிக்கெட்டுகள் வாங்க வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் மைதானத்துக்குள் அனுமதிப்பதில் சிக்கல்தான் எனவும் ஐசிசி, ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×