என் மலர்

  செய்திகள்

  ரஷித் கான்
  X
  ரஷித் கான்

  உலகக்கோப்பை தோல்வி எதிரொலி: ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தான் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக சுழற்பந்து வீச்சாளராக ரஷித் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பங்கேற்றன. தகுதிச் சுற்றில் வெற்றி வாகை சூடி இடம் பிடித்த அணிகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். இந்தத் தொடரில் ஏதாவது ஒரு அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 9 லீக் ஆட்டத்திலும் தோல்வியடைந்து ஒரு புள்ளி கூட இல்லாமல் பரிதாபமாக வெளியேறியது.

  ஆப்கானிஸ்தான் அணி அஸ்கர் ஆப்கன் தலைமையில் மிகச் சிறப்பாக விளையாடி உலக அணிகளுக்கு சவால் விடுத்து வந்தது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன் யாரும் எதிர்பார்க்காத வகையில் அஸ்கர் ஆப்கன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குல்பதின் நைப் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

  இதற்கு ரஷித் கான் கடும் கண்டனம் தெரிவித்தார். உலகக்கோப்பை தொடருக்கு சற்று முன் கேப்டனை மாற்றியது நியாயம் அல்ல என்றார். உலகக்கோப்பை தொடரில் அஸ்கர் ஆப்கனுக்கு சரியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.

  மேலும், மிடில் ஆர்டரில் களம் இறங்கிய குல்பதின் நைப் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் நைப் 18 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

  இதுபோன்ற ஏராளமான சர்ச்சையால் குல்பதின் நைப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த ரஹ்மத் ஷாவும் நீக்கப்பட்டார். இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகை கிரிக்கெட் அணிக்கும் ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  Next Story
  ×