
அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜேசன் ராய் 85 ரன் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் ‘லெக்சைடில்’ வீசிய பந்தை அடிக்க முயன்றார். அந்த பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கேட்ச் அவுட் கேட்டு முறையிட்டார்.

நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜேசன் ராயின் செயல் ஐ.சி.சி.யின் விதியை மீறியதாகும். இதையடுத்து அவருக்கு போட்டி கட்டணத் தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட் டுள்ளது. அத்துடுன் சஸ்பெண்டுக்கான இரண்டு புள்ளிகளையும் வழங்கியது.
இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜேசன்ராய்க்கு 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒழுங்கு நடவடிக்கையில் இரண்டு தகுதி இழப்பு புள்ளிகளும் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.