search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண் கலங்கிய இந்திய ரசிகை
    X
    கண் கலங்கிய இந்திய ரசிகை

    ரசிகர்களை கலங்க வைத்த இந்திய வீரர்கள் - பெண்கள், சிறுவர்கள் கண்ணீர்

    உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்ததை பார்த்த பெண்கள், சிறுவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
    எந்த விளையாட்டுக்கும் இல்லாத ரசிகர் பட்டாளம் கிரிக்கெட்டுக்கு மட்டுமே உண்டு.

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து அணியிடம் மட்டுமே தோல்வியை தழுவி இருந்த இந்திய அணி சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா, பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.

    அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை நேற்று முன்தினம் இந்திய அணி எதிர் கொண்டது. எப்போதும் போல இந்திய பவுலர்கள் நியூசிலாந்தை பந்தாடினர்.

    மழை குறுக்கிட்டதால் விட்ட இடத்தில் இருந்து நேற்று மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 239 ரன்களை மட்டுமே எடுத்து நியூசிலாந்து ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி எளிதாக வென்று விடும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    அதே நேரத்தில் 2 நாட்களாக விட்டு விட்டு பெய்த மழை இந்திய அணிக்கு சோதனையாகவே அமைந்திருந்தது. 2-வதாக பேட்டிங் செய்யும் அணி, சேசிங் செய்வது கஷ்டம் என்றே கிரிக்கெட் நிபுணர்கள் கணித்திருந்தனர். அதுபோலவே நடந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். அப்போதே ரசிகர்களின் நம்பிக்கை தகர்ந்து போனது. இதன் பின்னர் வந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் சோபிக்கவில்லை.

    இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா, ரிசப் பந்த் இருவரின் விளையாட்டுத்தனமான ஆட்டமும் வினையாகிப்போனது.

    இதன் பின்னர் களம் இறங்கிய ரவீந்திர ஜடேஜா, இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். டோனியின் நிதானமான அனுபவ ஆட்டமும், ஜடேஜாவின் அதிரடி தாக்குதலும் இந்திய அணியை நிச்சயம் வெற்றி பெறச்செய்யும் என்றே ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால் ஜடேஜா கேட்ச் ஆகி வெளியேறி ரசிகர்களின் இதயங்களை சுக்கு நூறாக நொறுக்கினார்.

    இதன் பின்னர் டோனி அடித்த சிக்சரால் ரசிகர்கள் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தனர். ஆனால் கூடுதலாக ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு டோனியும் ரன் அவுட் ஆக... ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களின் உலக கோப்பை கனவு ஒரே நொடியில் கலைந்து போனது.

    சோகத்தில் இந்திய ரசிகர்கள்


    இதனால் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனை மைதானத்தில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களும், தொலைக் காட்சிகளின் முன்பு வெற்றிக்காக தவம் கிடந்த ரசிகர்களும் கண்ணீர் விட்டனர்.

    கண்ணீர் விட்ட ரசிகை


    குறிப்பாக இளம் பெண்களும் சிறுவர்கள் பலரும் தோல்வியை தாங்க முடியாமல் ஏங்கி ஏங்கி அழுததையும் காண முடிந்தது. லீக் ஆட்ட வெற்றிகள் மூலம் இந்திய அணியை கொண்டாடிய ரசிகர்கள் அரை இறுதி தோல்வியால் கலங்கிப் போனார்கள்.

    தோல்வி குறித்து ரசிகர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

    சென்னை வால்டாக்ஸ் ரோட்டை சேர்ந்த ஜனா:-

    இந்தியா தோல்வியை தழுவியது மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் 3 பேரும் சேர்ந்து 50, 50 ரன்கள் எடுத்து இருக்கலாம். அதை விட்டுவிட்டார்கள். டோனியின் அனுபவமும், ஜடேஜாவின் அதிரடியும் படுதோல்வியில் இருந்து நம்மைக் காப்பாற்றியது.

    ஜெயிக்க வேண்டிய நாம் மெத்தனம் காரணமாக தோற்றுவிட்டோம். நியூசிலாந்தை சாதாரணமாக எடைபோட்டிருக்க கூடாது. என்னை போன்ற ரசிகர்களுக்கு இதுபெரிய அதிர்ச்சியாகவே உள்ளது.

    சோகத்தில் சிறுவன்


    என் வாழ்நாளில் கதறி கதறி அழுதது நேற்று தான். டோனியின் தீவிர ரசிகராக நான் இருந்ததில்லை. ஆனால் நேற்று அவருடைய ஆட்டமும், சூழ்நிலையும் அவர் மீது எனக்கு மிகுந்த அனுதாபத்தை உண்டாக்கியது. முதல் 3 விக்கெட் போனது முதல் தோல்வியாகும்.

    தினேஷ் கார்த்திக் இறங்குவதற்கு முன்பாக டோனி இறங்கி இருந்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றி இருப்பார். டோனியும் ஜடேஜாவும் தான் ரன் ரேட் வித்தியாசத்தை குறைத்தனர். ஹர்திக் பாண்ட்யா அவரது ஆட்டத்தை கோட்டை விட்டார். 2011-ல் டோனியின் முடிவால் கோப்பையை வென்றோம். கோலிக்கு டோனி மேல் மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உண்டு. அவரே நினைத்தாலும் டோனியை தகுந்த நேரத்தில் களமிறக்காதது ரவி சாஸ்திரியின் முடிவாகத்தான் இருக்கும். எப்படியோ இந்தியாவின் தோல்வி நமது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்.
    Next Story
    ×