என் மலர்

  செய்திகள்

  சச்சின் டெண்டுல்கர்
  X
  சச்சின் டெண்டுல்கர்

  டீமில் இவர்களை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க முடியாது -என்ன சொல்கிறார் சச்சின்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக கோப்பை கிரிக்கெட் அணியில் இந்தியா வீழ்ச்சி அடைந்தது குறித்து சச்சின் என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போம்.
  உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் நேற்று முன்தினம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.

  மழை குறுக்கிட்டதால் மறுநாள்(நேற்று) ஆட்டம் ரிசர்வ் செய்யப்பட்டது. இதனையடுத்து 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நேற்று களம் இறங்கியது.

  கடைசி ஓவரில் சாஹல் ஆட்டமிழக்க இந்தியா 49.3 ஓவரில் 221 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இது குறித்து முன்னாள் இந்திய அணியின் வீரரான சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:

  இந்திய அணி

  240 எனும் இலக்கை சந்தேகம் இன்றி இந்தியா நிச்சயம் அடைந்திருக்க முடியும். இது பெரிய ஸ்கோர் அல்ல. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்துவிட்டனர்.

  அணி எப்போதும் ரோகித், விராட் கோலி ஆகியோரையே நம்பிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள்தான் சிறப்பான தொடக்கம் கொடுத்திருக்க வேண்டும் என்றும் சொல்லக் கூடாது. அணியில் அனைவருக்குமே பொறுப்பு உண்டு.

  டோனியும், ஜடேஜாவும் சிறப்பாக விளையாடினார்கள். 7வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் என்பது சிறப்பான ஒன்றுதான். எப்போதுமே டோனி வந்து ஆட்டத்தை இறுதியில் முடித்துக் கொடுப்பார் என நினைப்பது சரியானதே அல்ல.

  நியூசிலாந்து அணி மிகச் சிறப்பாக விளையாடியது. கேன் வில்லியம்சனின் தலைமை மிகச் சிறப்பாக இருந்ததை நான் உணர்ந்தேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.  Next Story
  ×