search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியினர்
    X
    இந்திய அணியினர்

    இந்திய அணி 4-வது முறையாக அரைஇறுதியுடன் வெளியேற்றம்

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரைஇறுதி வரை வந்து தோற்று வெளியேறியது இது 4-வது முறையாகும்.
    * உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதியில் தோற்பது இது 4-வது நிகழ்வாகும். ஏற்கனவே 1987, 1996, 2015-ம் ஆண்டுகளிலும் அரைஇறுதியுடன் வெளியேறி இருந்தது.

    * 2015-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-வது பேட்டிங் செய்து 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதே போல் இந்த முறையும் இலக்கை விரட்ட முடியாமல் இந்தியா பணிந்திருக்கிறது.

    * உலக கோப்பை கிரிக்கெட்டில் லீக்கில் அசத்தும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு கால்இறுதி, அரைஇறுதி, இறுதிப்போட்டி போன்ற ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்கள் என்றாலே அலர்ஜியாகி விடுகிறது. அதாவது 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து இதுவரை நாக்-அவுட் சுற்று ஆட்டங்களில் 24, 9, 35, 3, 1, 1 ரன் வீதம் எடுத்து சோடை போயுள்ளார்.

    * இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் 27 ரன்கள் எடுத்தால் ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவரான ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருந்தது. அந்த பொன்னான வாய்ப்பை ரோகித் சர்மா கோட்டை விட்டு விட்டார். இந்த உலக கோப்பையில் ரோகித் சர்மா 9 ஆட்டங்களில் ஆடி 5 சதம் உள்பட 648 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.

    * இந்திய அணி கடைசியாக ஆடிய 5 ஐ.சி.சி. தொடர்களிலும் முக்கியமான கட்டத்தில் தோற்று வெளியேறி இருக்கிறது. அதாவது 20 ஓவர் உலக கோப்பையில் 2014-ம் ஆண்டில் இறுதி ஆட்டத்திலும், 2016-ம் ஆண்டில் அரைஇறுதியிலும், 50 ஓவர் உலக கோப்பையில் 2015 மற்றும் 2019-ல் அரைஇறுதியிலும், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 2017-ம் ஆண்டில் இறுதி ஆட்டத்திலும் தோல்வி கண்டிருக்கிறது.
    Next Story
    ×