search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீராபாய்
    X
    மீராபாய்

    காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்திய அணி அசத்தல்- சீனியர் பிரிவில் மீராபாய் தங்கம் வென்றார்

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், சீனியர் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றதுடன், இந்திய அணி அதிக பதக்கங்களை குவித்து அசத்தி உள்ளது.
    ஆப்பியா:

    தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான சமோவாவில், காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று இந்திய அணி, பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளது.

    குறிப்பாக, முன்னாள் உலக சாம்பியன் மீராபாய் சானு, சீனியர் பிரிவில் தங்கம் வென்று அசத்தி உள்ளார். பெண்களுக்கான சீனியர் 49 கிலோ எடைப்பிரிவினருக்கான போட்டியில், மொத்தம் 191 கிலோ எடையை தூக்கி அவர் தங்கம் வென்றார்.

    மேலும் 45 கிலோ எடைப் பிரிவினருக்கான போட்டியில், ஜில்லி தலபேரா மொத்தம் 154 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார். 55 கிலோ எடைப்பிரிவில் பிந்தியாராணி தேவி தங்கமும், மத்சா சந்தோஷி வெள்ளியும் வென்றனர். இதேபோல் ஆண்களுக்கான சீனியர் 55 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரர் ரிஷிகாந்த சிங், 235 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார்.

    இதுதவிர ஜூனியர், இளையோர் பிரிவிலும் இந்திய வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் இன்று மட்டும் இந்திய அணி 8 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை குவித்துள்ளது. 
    Next Story
    ×