search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹீமா தாஸ்
    X
    ஹீமா தாஸ்

    போலந்தில் நடைபெற்ற தடகள போட்டியில் ஹிமா தாஸ் தங்கம் வென்றார்

    போலந்தில் நடைபெற்ற தடகளத்தில் இந்திய வீராங்கனை ஹீமா தாஸ் 200 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.
    போலந்து நாட்டில் போஸ்னன் அத்லெடிக்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் ஹீமா தாஸ் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

    400 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தேசிய சாதனைப் படைத்துள்ள ஹீமா தாஸ், முகுது வலி காரணமாக கடந்த சில மாதங்களாக போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் போலந்தில் 200 மீட்டர் தூரத்தை 23.65 வினாடிகளில் கடந்தார்.

    ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தூர் வெண்கல பதக்கம் வென்றார். அவர் 19.62 மீட்டர் தூரம் வரை குண்டு எறிந்தார்.
    Next Story
    ×