search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்பிராஸ் அகமது
    X
    சர்பிராஸ் அகமது

    இறைவன் அருளால் அதிசயங்கள் நிகழும் -பாகிஸ்தான் கேப்டன்

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் இறைவன் அருளால் அதிசயங்கள் நிகழும் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார்.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன. இந்த 43வது லீக் ஆட்டம் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

    பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் மேஜிக்தான் நடந்தாக வேண்டும் என்கிற நிலைக்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி இப்போது 9 புள்ளிகளுடன் தர வரிசை பட்டியலில் உள்ளது.

    ஒரு வேளை, இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் 11 புள்ளிகள் பெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே 11 புள்ளிகளுடன் பட்டியலில் நியூசிலாந்து அணி உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:

    பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள்

    கடைசி ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். அனைத்து போட்டிகளிலும் வெற்றிப் பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் களம் காண்கிறோம்.  வங்காள தேசத்துடனான இன்றைய போட்டியில் அதிக ரன்கள் எடுத்து வெற்றிப் பெறவே பாடுபடுவோம்.

    வெற்றிக்காக முழு முயற்சி எடுப்போம். ஆனால், எதார்த்தம் எதுவோ, அதையும் சிந்திக்க வேண்டும். இந்த தொடரில் உள்ள பிட்ச்களில் 280-300 ரன்கள் வரைதான் குவிக்க முடிகிறது. இந்த பிட்ச்கள் அதிக ரன்களை குவிக்கும்படி இல்லை.

    எனவேதான் ஸ்பின்னர்களின் பந்துகளை எதிர்க்கொள்வது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. பந்துகள் சில சமயங்களில் பேட்டிற்கே வருவதில்லை. இதுபோன்ற சூழலில் இறைவன் அருளினால் அதிசயங்கள் நிச்சயம் நிகழும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×