search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோகோ காஃப்
    X
    கோகோ காஃப்

    விம்பிள்டன் டென்னிஸ்- வீனசை வீழ்த்திய கையோடு அடுத்த சுற்றிலும் அசத்திய காஃப்

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்சை வீழ்த்திய கோகோ காஃப், 2வது சுற்றிலும் வெற்றி பெற்றார்.
    லண்டன்:

    லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் இளம் வீராங்கனையான கோகோ காஃப் (வயது 15), அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையும், ஐந்து முறை விம்பிள்டன் பட்டம் வென்றவருமான வீனஸ் வில்லியம்சை 6-4, 6-4 என எளிதில் வீழ்த்தினார். இந்த வெற்றியால் கோகா காஃப், அனைத்து  ஊடகங்களிலும் தலைப்புச் செய்தி ஆனார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், 2வது சுற்றில் ஸ்லோவேகியாவின் மக்டலேனா ரிபாரிகோவாவை கோகோ காஃப் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கோகோ காஃப் 6-3, 6-3 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு விம்பிள்டனில் ரிபாரிகோவா அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    தனது வெற்றி குறித்து காஃப் கூறுகையில், “இன்றைய போட்டியில் நான் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தாலும் ஒருவித பதற்றம் இருப்பதை உணர முடிகிறது. என்னால், இனி யாரை வேண்டுமானாலும் எதிர்த்து வெற்றி பெற முடியும் என நம்பிக்கையும் வந்துள்ளது” என்றார்.
    Next Story
    ×