search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெர்னாட் டொமிக்
    X
    பெர்னாட் டொமிக்

    விம்பிள்டனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாத ஆஸ்திரேலிய வீரருக்கு 45 ஆயிரம் பவுண்டு அபராதம்

    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாமில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால், ஆஸ்திரேலிய வீரருக்கு 45 ஆயிரம் பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெர்னாட் டொமிக் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோ-விபிரைட்டை எதிர்கொண்டார். இதில் பெர்னாட் டொமிக் 2-6, 1-6, 4-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

    அவர் கடந்த காலத்தை போன்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று நடுவர்கள் தெரிவித்தனர். அனுபவம் இல்லாத வீரருக்கு எதிராக 58 நிமிடத்திலேயே தோல்வியடைந்த அவருக்கு போட்டியின் வருமானத்தில் இருந்து 45 ஆயிரம் பவுண்டு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×