search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிராங்க் லம்பார்ட்
    X
    பிராங்க் லம்பார்ட்

    செல்சியின் தலைமை பயிற்சியாளராக பிராங்க் லம்பார்ட் நியமனம்

    செல்சி அணியின் தலைமை பயிற்சியாளராக அந்த அணிக்காக விளையாடி அதிக கோல் அடித்து சாதனைப் படைத்திருந்த பிராங்க் லம்பார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் விளையாடும் முன்னணி கால்பந்து கிளப் அணிகளில் ஒன்று செல்சி. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மவுரிசியோ சர்ரி நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரரும், செல்சி அணிக்காக அதிக கோல்கள் அடித்தவருமான பிராங்க் லம்பார்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தற்போது பிராங்க் லம்பார்ட் டெர்பி கவுன்ட்டி அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். அங்கிருந்து செல்சி வர 4 மில்லியன் பவுண்டு கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது அணி நிர்வாகனம்.

    பிராங்க் லம்பார்ட் கடந்த வருடம்தான் தலைமை பயிற்சியாளர் பணியை தொடங்கினார். இவர் இங்கிலாந்து தேசிய அணிக்காக 106 போட்டிகளில் விளையாடி  29 ரன்கள் அடித்துள்ளார். மேலும் செல்சி அணிக்காக 2001 முதல் 2014 வரை சுமார் 14 வருடங்கள் விளையாடி  147 கோல்கள் அடித்துள்ளார்.
    Next Story
    ×