என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யாக்கர்களில் உள்ள தந்திரம் என்ன? -ரகசியத்தை உடைத்தார் பும்ரா
Byமாலை மலர்4 July 2019 10:42 AM GMT (Updated: 4 July 2019 10:42 AM GMT)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, யாக்கர் பந்துகளில் உள்ள தந்திரம் என்ன எனும் ரகசியத்தை உடைத்து பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவர் ஐ.சி.சி. பந்து வீச்சாளர்கள் தர வரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நேற்று முன்தினம் வங்காள தேசம் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றிப் பெற்றது. இதற்கு உறுதுணையாக இருந்தது பும்ராவின், துல்லியமான யார்க்கர் பந்துகள்தான்.
போட்டியின் இறுதி கட்டத்தில் பும்ராவின் யார்க்கர்கள்தான் இந்த உலக கோப்பை தொடரில் எதிர் அணிகளின் பேட்ஸ்மேன் மற்றும் ஸ்டம்புகளை பதம் பார்த்து வருகிறது.
இந்த போட்டியில் 48வது ஓவரை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பும்ராவிடம் ஒப்படைத்தார். இந்த ஓவரின் 5வது பந்தில் 10வது பேட்ஸ்மேனான ருபெல் ஹொசேனுக்கு மின்னல் வேகத்தில் ‘மிடில் ஸ்டம்ப் யார்க்கர்' கொடுத்தார்.
இதையடுத்து ஸ்டெம்ப் தெறித்தது. வங்காள தேச அணியின் கடைசி பேட்ஸ்மேனாக முஸ்தபிசூர் ரகுமான் களம் இறங்கினார். அவருக்கும் அதே அடி. பும்ராவுக்கு அந்த ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகள் விழ்ந்தன.
போட்டியில் மொத்தமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார். இந்தியா, 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது குறித்து ஜஸ்பிரித் பும்ரா கூறியதாவது:
யாக்கரை பொறுத்தவரை அனைத்துமே பயிற்சியை பொறுத்தது மட்டுமே. வலையில் வீசி வீசிப் பார்க்க வேண்டும், அதே முறையை ஆட்டத்திலும் பயன்படுத்த வேண்டும். பயிற்சி சரியானதாக இருந்து விட்டால் அனைத்தும் ஆடுகளத்திலும் சரியானதாக அமைந்து விடும்.
பிட்ச் மந்தமாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் புதிய பந்துகளில் நிச்சயம் ரன்கள் குவிக்கதான் பார்ப்பார்கள். பந்தை விரைவில் பழசாக்கி விட்டால் ஸ்டோர்க் ஆட முடியாது. கோடை காலம் வந்தால் பிட்ச்கள் வறண்டு விடும்.
டெத் பவுலிங் என்பது நாம் புத்தியளவில் தெளிவாய் இருப்பதில்தான் இருக்கிறது. நான் எடுக்கும் முடிவிற்குதான் பந்து வீசுவேன். கேப்டனிடம் நான் இதைதான் செய்யப்போகிறேன் என கூறிவிடுவேன். இது என்னால் முடியும் என்பேன். அப்படியே செய்வேன்.
அணியின் இலக்கு என்னவோ அதை வைத்துதான் நான் பந்து வீசுவேன். இதுதான் என் முதல் உலக கோப்பை, தொடர்ந்து பங்கேற்க வேண்டும். அனுபவம் நிறைய வேண்டும் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வங்காள தேசம், இந்திய அணியை வீழ்த்தும் நிலையில் இருந்தது. அந்த அணிக்குக் கடைசி 3 ஓவர்களின் 36 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. கையில் 2 விக்கெட்டுகள் இருந்தன. வங்காள தேச அணியின் முகமது சைபுதீன், அரைசதம் அடித்து கூலாக இருந்தார்.
இந்த போட்டியில் 48வது ஓவரை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பும்ராவிடம் ஒப்படைத்தார். இந்த ஓவரின் 5வது பந்தில் 10வது பேட்ஸ்மேனான ருபெல் ஹொசேனுக்கு மின்னல் வேகத்தில் ‘மிடில் ஸ்டம்ப் யார்க்கர்' கொடுத்தார்.
இதையடுத்து ஸ்டெம்ப் தெறித்தது. வங்காள தேச அணியின் கடைசி பேட்ஸ்மேனாக முஸ்தபிசூர் ரகுமான் களம் இறங்கினார். அவருக்கும் அதே அடி. பும்ராவுக்கு அந்த ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகள் விழ்ந்தன.
போட்டியில் மொத்தமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார். இந்தியா, 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது குறித்து ஜஸ்பிரித் பும்ரா கூறியதாவது:
யாக்கரை பொறுத்தவரை அனைத்துமே பயிற்சியை பொறுத்தது மட்டுமே. வலையில் வீசி வீசிப் பார்க்க வேண்டும், அதே முறையை ஆட்டத்திலும் பயன்படுத்த வேண்டும். பயிற்சி சரியானதாக இருந்து விட்டால் அனைத்தும் ஆடுகளத்திலும் சரியானதாக அமைந்து விடும்.
பிட்ச் மந்தமாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் புதிய பந்துகளில் நிச்சயம் ரன்கள் குவிக்கதான் பார்ப்பார்கள். பந்தை விரைவில் பழசாக்கி விட்டால் ஸ்டோர்க் ஆட முடியாது. கோடை காலம் வந்தால் பிட்ச்கள் வறண்டு விடும்.
டெத் பவுலிங் என்பது நாம் புத்தியளவில் தெளிவாய் இருப்பதில்தான் இருக்கிறது. நான் எடுக்கும் முடிவிற்குதான் பந்து வீசுவேன். கேப்டனிடம் நான் இதைதான் செய்யப்போகிறேன் என கூறிவிடுவேன். இது என்னால் முடியும் என்பேன். அப்படியே செய்வேன்.
அணியின் இலக்கு என்னவோ அதை வைத்துதான் நான் பந்து வீசுவேன். இதுதான் என் முதல் உலக கோப்பை, தொடர்ந்து பங்கேற்க வேண்டும். அனுபவம் நிறைய வேண்டும் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×