search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் அணி
    X
    பாகிஸ்தான் அணி

    இப்படி ஒரு மேஜிக் நடந்தால் தான் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வங்காள தேச அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் எதாவது மேஜிக் நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
    உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டம் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. அரையிறுதிக்கு இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை வென்றதன் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் 4-வது இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் போட்டி போடுகின்றன. இதில், நியூசிலாந்துக்கே அதிக வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில், புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    நியூசிலாந்து அணி


    பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்காள தேச அணியை நாளை சந்திக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் 11 புள்ளிகளை பெறும். நியூசிலாந்து அணி ஏற்கனவே 11 புள்ளிகளுடன் இருப்பதால் இரு அணிகளும் சம நிலையில் இருக்கும். இதனால் ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அரையிறுதிக்கு செல்லும்.

    நியூசிலாந்து அணி ரன் ரேட்டில் (+0.175), பாகிஸ்தான் அணி (-0.792) உள்ளதால் அரையிறுதி வாய்ப்பு அதிகமாக நியூசிலாந்துக்கே உள்ளது. பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு நுழைய வேண்டும் என்றால் வங்காள தேசத்தை அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

    அதாவது பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து, 400 ரன்கள் எடுத்து வங்காளதேசத்தை 316 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். 350 ரன்கள் குவித்தால் 38 ரன்களில் சுருட்ட வேண்டும். இதில் எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை. பாகிஸ்தான் அணி 2-வது பேட்டிங் செய்தாலும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிபெறுவது உறுதி.
    Next Story
    ×