search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேசில் கால்பந்து அணி வீரர்கள்
    X
    பிரேசில் கால்பந்து அணி வீரர்கள்

    கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பிரேசில்

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி பிரேசில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    ‘கோபா’ அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை நடந்த அரை இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரேசில் - அர்ஜெண்டினா அணிகள் மோதின.

    இதில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி முன்னேறியது. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் ஜீஸசும், 71-வது நிமிடத்தில் ஃபேர்மினோவும் கோல் அடித்தனர்.

    சோகத்தில் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்சி

    பிரேசில் அணி இறுதி போட்டியில் சிலி அல்லது பெருவை சந்திக்கிறது. 2-வது அரை இறுதி ஆட்டம் நாளை காலை நடக்கிறது.
    Next Story
    ×