search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    இந்திய அணியின் புதிய ஜெர்சி மிகவும் பிடித்துள்ளது- விராட் கோலி

    இந்திய அணியின் புதிய ஜெர்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தனக்கு புது ஜெர்சி மிகவும் பிடித்துள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. லீக் ஆட்டங்களில் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அந்த வகையில் இதுவரை ஆஸ்திரேலியா அணி மட்டும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 

    மீதமுள்ள 3 இடங்களுக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் இந்தியா எஞ்சியுள்ள 3 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். நியூசிலாந்து அணியும் எஞ்சியுள்ள 2 போட்டிகளில் 1 போட்டியில் வென்றாக வேண்டிய சூழலில் உள்ளது. 

    அதேசமயம் இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதிபெற முடியும் என்ற இக்கட்டான சூழலில் உள்ளது. இதனிடையே இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

    புது ஜெர்சியுடன் விராட் கோலி

    இந்நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இத்தொடரில் இங்கிலாந்து தான் ஆதிக்கம் செலுத்தும் என நினைத்தோம். ஆனால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சொந்தமண்ணில் இங்கிலாந்து அணி திணறுவது ஆச்சரியமாக உள்ளது. 

    இந்திய அணியின் புது ஜெர்சி  குறித்து கோலி கூறுகையில், "எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒரு போட்டியில் தான் இந்த ஜெர்சி அணிந்து விளையாடுவோம். இனிவரும் போட்டிகளிலும் இதே ஜெர்சி அணிந்து விளையாடுவோமா என்பது எனக்கு தெரியாது" என தெரிவித்தார்.

    புது ஜெர்சி அணிந்துள்ள இந்திய வீரர்கள்

    தோனி குறித்து கோலி கூறியதாவது:- அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். நாங்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். ஒன்றிரண்டு போட்டிகளை வைத்து அவரது திறமையை மதிப்பிட முடியாது" என கூறினார்.  
    Next Story
    ×