search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷமிக்கு பதிலாக இவர் விளையாட வேண்டும் -சச்சின் யாரை சொல்கிறார்? காரணம் என்ன?
    X

    ஷமிக்கு பதிலாக இவர் விளையாட வேண்டும் -சச்சின் யாரை சொல்கிறார்? காரணம் என்ன?

    இந்திய அணியில் ஷமிக்கு பதிலாக இந்த வீரர் விளையாடலாம் என இந்திய அணியின் ஜாம்பவானாக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் ஒருவரை கூறியுள்ளார். யாரை சொல்கிறார்? ஏன் சொல்கிறார்? என பார்ப்போம்.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதியபோது இந்திய அணியின் புவனேஷ்குமார் காயமடைந்தார்.

    இதனையடுத்து இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும்போது புவனேஷ் விளையாடவில்லை. இவருக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டார். இந்த ஆட்டத்தில் ஷமி சிறப்பாக பந்து வீசி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து இந்திய அணி இன்று வெஸ்ட் இண்டீசுடன் மோத உள்ளது. இது குறித்து இந்திய அணியின் ஜாம்பவானாக திகழும் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:

    புவனேஷ் குமார் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். அவர் பயிற்சி மேற்கொள்ளும்போது பந்து வீசுவதை பார்த்தேன். அவர் மிகவும் நல்ல உடல்நிலையில் உள்ளார்.



    வெஸ்ட் இண்டீசுடன் இந்தியா மோதும்போது ஷமிக்கு பதிலாக புவனேஷ்குமார் மீண்டும் விளையாட வேண்டும். ஏனென்றால், புவனேஷ் இடது கை ஆட்டக்காரர்களுக்கு சிறப்பாக பந்து வீசுவார்.

    குறிப்பாக கெயிலுக்கு கடும் நெருக்கடியை புவனேஷ் கொடுப்பார். நான் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியிலும் கெயிலுக்கு அதிக நெருக்கடியை புவனேஷ் கொடுத்தார்.

    எனவே புவனேஷ் கட்டாயம் இந்த போட்டியில் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஷமியை நீக்குவதும் கடினமான ஒன்றுதான். ஆனால், வேறு வழி இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×