search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியின் ஜெர்சி நிறம் கவலை இல்லை.. நீலநிறமே எங்களுக்கு முக்கியம் -பாரத் அருண்
    X

    இந்திய அணியின் ஜெர்சி நிறம் கவலை இல்லை.. நீலநிறமே எங்களுக்கு முக்கியம் -பாரத் அருண்

    இந்திய அணியின் ஜெர்சி நிறம் குறித்து எவ்வித கவலையும் இல்லை எனவும், நீலநிறம்தான் முக்கியம் எனவும் அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் கூறியுள்ளார்.
    1992ம் ஆண்டு முதல் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வண்ண சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அன்று முதல் தற்போது வரை நீல நிற சீருடை அணிந்தே இந்திய அணி களம் காண்கிறது. இதனால் இந்திய அணியை 'Men In Blue' என செல்லமாக அழைப்பதும் உண்டு.

    உலக கோப்பை தொடரில் இதுவரை இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நீல நிற உடையில் விளையாடி வருகின்றனர். நீல நிறம் தான் என்றாலும் அதில் வித்தியாசம் இருக்கும்.

    நடப்பு உலக கோப்பை தொடரில் ஐசிசி புதிய விதியை கொண்டு வந்தது. அதன்படி, ஒரு போட்டியில் ஒரே நிற ஆடைகளை அணிந்து விளையாடக்கூடாது என்றும், அப்படி விளையாடுவதால் வீரர்களின் அணிகளை சரியாக கணக்கிட முடியாது என்பதால் சீருடை மாற்றப்படுகிறது என குறிப்பிட்டது.



    அந்த வகையில் ஜூன் 30ம் தேதி இங்கிலாந்துடன் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆரஞ்சு நிற சீருடையுடன் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

    இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் பந்து வீச்சாளர் பாரத் அருண் நேற்று கூறுகையில், ‘எந்த நிற ஜெர்சி அணியப்போகிறோம் என எங்களுக்கு தெரியாது. அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டி குறித்தே யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

    போட்டியில் கவனம் செலுத்துவதே முக்கிய நோக்கம். நாங்கள் நீல நிறத்தில்தான் இருக்கிறோம். நீல நிறம்தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது’ என கூறியுள்ளார். 
    Next Story
    ×