search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இங்கிலாந்தை 2-வது இடத்திற்கு விரட்டி இந்தியா முதலிடம்
    X

    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இங்கிலாந்தை 2-வது இடத்திற்கு விரட்டி இந்தியா முதலிடம்

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் ஐசிசி தரவரிசையில் சறுக்கி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து முதல் இடத்தை தக்க வைத்திருந்தது.

    உலகக்கோப்பையில் முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் அரையிறுதிக்கு எளிதாக முன்னேறும் என்று எதிர்பார்த்த நிலையில் இலங்கை, ஆஸ்திரேலியாவிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்து சிக்கலில் மாட்டியுள்ளது.

    மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து இந்தியா ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று அசத்தியது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. தோல்வியை சந்திக்காமல் இருப்பதால் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

    இந்தியா 123 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 116 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.
    Next Story
    ×