search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா தகுதி - அரையிறுதியில் நுழையும் 3 அணிகள் எவை?
    X

    ஆஸ்திரேலியா தகுதி - அரையிறுதியில் நுழையும் 3 அணிகள் எவை?

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்ற நிலையில் மற்ற 3 அணிகள் எவை என்பது குறித்து பார்க்கலாம்.
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 13 ‘லீக்‘ ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மட்டுமே தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன.

    அரை இறுதிக்கு நுழையும் மற்ற 3 அணிகள் எவை? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணிகளின் நிலை பற்றி வருமாறு:-

    ஆஸ்திரேலியா 6 வெற்றி, 1 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் அணியாக அரை இறுதிக்கு நுழைந்தது.

    அந்த அணி எஞ்சிய 2 ஆட்டங்களில் நியூசிலாந்து (29-ந்தேதி), தென்ஆப்பிரிக்காவுடன் (ஜூலை 6) மோத வேண்டி உள்ளது. புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் ஆர்வத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.

    5 வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 11 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகியவற்றுடன் மோத வேண்டி உள்ளது. இதில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிடும். இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தினால் நியூசிலாந்து முன்னேறிவிடும்.

    விராட்கோலி தலைமையிலான இந்தியா 4 புள்ளிகள்,ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 9 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    இந்திய அணிக்கு இன்னும் 4 ஆட்டம் எஞ்சியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் (27-ந்தேதி), இங்கிலாந்து (30-ந்தேதி), வங்காளதேசம் (ஜூலை 2), இலங்கை (ஜூலை 6), ஆகியவற்றுடன் மோத வேண்டி உள்ளது. இதில் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறும்.

    உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து நெருக்கடியில் உள்ளது, அந்த அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய 2 ஆட்டத்தில் கண்டிப்பாக வெல்ல வேண்டும். இங்கிலாந்து அணி இந்தியா, நியூசிலாந்துடன் மோத வேண்டி உள்ளது. ஒரு வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு வாய்ப்பு நிச்சயமில்லை.

    இலங்கை அனைத்து ஆட்டத்திலும், பாகிஸ்தான், வங்காளதேசம் 2 ஆட்டத்திலும் தோற்றால் மட்டுமே இங்கிலாந்துக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    வங்காள தேச அணி 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 7 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சி உள்ளன. இந்தியா, பாகிஸ்தானுடன் மோத வேண்டி உள்ளது.

    இதில் வெற்றி பெற்றால் அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெறும். அதேநேரத்தில் இலங்கையும், இங்கிலாந்தும் எஞ்சிய ஆட்டங்களில் தோற்க வேண்டும்.

    இலங்கை அணி 2 வெற்றி, 2 தோல்வி, 2 முடிவு இல்லை ஆகியவற்றுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா ஆகியவற்றுடன் மோத வேண்டி உள்ளது. 3 ஆட்டத்திலும் வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். 10 புள்ளி பெற்றால் இங்கிலாந்தின் முடிவுக்காக காத்திருக்கும்.

    6 ஆட்டத்தில் 3 புள்ளிகளை பெறுள்ளது வெஸ்ட் இண்டீஸ். இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தானுடன் மோத வேண்டி உள்ளது. இந்த 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் தகுதி பெறுவது சவாலானது. மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

    4-வது அணியாக அரை யிறுதிக்கு தகுதி பெறுவதில் இங்கிலாந்து, வங்காள தேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே போட்டி நிலவுகிறது.
    Next Story
    ×