search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிர் ஹாக்கி பைனல்ஸ்: ஜப்பானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
    X

    மகளிர் ஹாக்கி பைனல்ஸ்: ஜப்பானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

    ஹிரோஷிமாவில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா ஹாக்கி மைதானத்தில் மகளிர் பைன்ல்ஸ் தொடர் ஹாக்கி நடைபெற்று வந்தது. இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சொந்த மைதானத்தில் விளையாடிய ஜப்பானுக்கு இந்தியா அதிர்ச்சி கொடுத்தது.

    ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை ராணி ரம்பால் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலாக ஜப்பான 11-வது நிமிடத்தில் கோல் அடித்தது.

    45-வது மற்றும் 60-வது நிமிடங்களில் குர்ஜித் கவுர் அடுத்தடுத்து கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-1 என ஜப்பானை வீழ்த்தியது. இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் ஏற்கனவே இந்தியா 2020 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×