search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6 ரன்னில் ஆல்அவுட், 4 பந்தில் வெற்றி: கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் மோசமான நிகழ்வு
    X

    6 ரன்னில் ஆல்அவுட், 4 பந்தில் வெற்றி: கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் மோசமான நிகழ்வு

    ருவாண்டாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் மாலி பெண்கள் அணி 6 ரன்னில் ஆல்அவுட் ஆகி மிகவும் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.
    கிவிபுகா மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் ருவாண்டாவில் நடைபெற்று வருகிறது, ருவாண்டாவின் தலைநகரான கிகாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் மாலி - ருவாண்டா அணிகள் மோதின.

    நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மாலி 9 ஓவர்கள் விளையாடி 6 ரன்னில் சுருண்டது. ஒரேயொரு வீராங்கனை மட்டும் ஒரு ரன் அடித்தார். 9 வீராங்கனைகள் டக்அவுட் ஆனார்கள். உதிரியாக ஐந்து ரன்கள் கிடைத்ததால் மொத்தம் 6 ரன்கள் சேர்த்தது மாலி.

    பின்னர் ருவாண்டா நான்கு பந்தில் இலக்கை எட்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே மிக குறைந்த ஸ்கோராகும். அத்துடன் 116 மீதமுள்ள நிலையில் சேஸிங் செய்ததும் இதுவே முதன்முறை.



    இதற்கு முன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கெதிராக சீனா 14 ரன்களில் ஆல்அவுட் ஆனதே குறைந்த பட்ச ஸ்கோராக இருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்ததால் 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
    Next Story
    ×