search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6 ஆயிரம் ரன்களை கடந்து ஷாகிப் அல் ஹசன் சாதனை
    X

    6 ஆயிரம் ரன்களை கடந்து ஷாகிப் அல் ஹசன் சாதனை

    வங்காள தேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் 6 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வங்காள தேச முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அபாரமாக விளையாடினார். அவர் 124 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    ஷாகிப் அல் ஹசன் 23-வது ரன்னை எடுத்தபோது ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்னை தொட்டார். 202 இன்னிங்சில் 6101 ரன் எடுத்து உள்ளார். சராசரி 37.42 ஆகும். 9 சதமும், 44 அரை சதமும் எடுத்து உள்ளார்.

    6 ஆயிரம் ரன்னை எடுத்த 2-வது வங்காளதேச வீரர் ஆவார். தமிம் இக்பால் 6743 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இந்த உலகக்கோப்பையில் 2 சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஷாகிப் அல் ஹசன் இணைந்துள்ளார். அவர் ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிராக 121 ரன் குவித்து இருந்தார்.

    இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (107, 100), இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா (122, 140) ஆகியோர் 2 சதம் அடித்து உள்ளனர்.
    Next Story
    ×