search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபா அமெரிக்கா கால்பந்து- வெற்றிக் கணக்கை தொடங்கியது நடப்பு சாம்பியன் சிலி
    X

    கோபா அமெரிக்கா கால்பந்து- வெற்றிக் கணக்கை தொடங்கியது நடப்பு சாம்பியன் சிலி

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில், நடப்பு சாம்பியான சிலி அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது.
    சாவ் பாலோ:

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள 10 அணிகளோடு ஆசியாவைச் சேர்ந்த ஜப்பான், கத்தார் அணிகள் சிறப்பு அழைப்பின் பேரில் பங்கேற்றுள்ளன. 12 அணிகளும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன.

    அவ்வகையில், சி பிரிவில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சிலி அணியும், ஜப்பான் அணியும் மோதின. இதில், இளம் வீரர்களை கொண்ட ஜப்பான் அணி, துவக்கம் முதலே, அனுபவம் வாய்ந்த சிலி வீரர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.


    இறுதியில், சிலி அணி 4-0 என்ற கோல்கணக்கில் ஜப்பானை வென்று, இந்த தொடரில் வெற்றிக்கணக்கை தொடங்கியது. வர்காஸ் 2 கோல்களும், புல்கர், சான்செஸ் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

    சிலி அணி அடுத்து ஈக்வடார் அணியை 21ம் தேதி சந்திக்க உள்ளது. ஜப்பான் அணி 20-ம் தேதி உருகுவே அணியை எதிர்கொள்கிறது.
    Next Story
    ×