search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேலரி முழுவதும் ப்ளூ ஜெர்சிதான்: மைக்கேல் கிளார்க்குக்கு அரசியல் கலவையுடன் அசத்தலாக பதில் அளித்த கங்குலி
    X

    கேலரி முழுவதும் ப்ளூ ஜெர்சிதான்: மைக்கேல் கிளார்க்குக்கு அரசியல் கலவையுடன் அசத்தலாக பதில் அளித்த கங்குலி

    மான்செஸ்டர் கேலரி முழுவதும் ப்ளூ ஜெர்சியாகவும், இந்தியாவின் தேசிக்கொடியாகவும் காட்சியளித்தது என்று கூறிய மைக்கேல் கிளார்க்குக்கு கங்குலி பதிலளித்துள்ளார்.
    இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்க்க இரு அணி ரசிகர்களும் ஆசைப்படுவார்கள். எவ்வளவு பணம் செலவழித்தாலும் பரவாயில்லை என்று, நேரில் சென்று போட்டியை பார்த்து ரசிக்க ரசிகர்கள் துடிப்பார்கள். இதனால் இந்திய ரசிகர்கள் ப்ளூ கலர் ஜெர்சிகளையும், பாகிஸ்தான் ரசிகர்கள் பச்சை கலர் ஜெர்சிகளையும் அணிந்து போட்டியை கண்டு களிப்பார்கள்.

    அப்போது மைதானம் முழுவதும் ப்ளூ மற்றும் பச்சை கலராக காட்சியளிக்கும். ஆனால் நேற்றைய போட்டியின்போது மைதானத்தில் எங்கு பார்த்தாலும் ப்ளூ ஜெர்சியாகத்தான் தெரிந்தது. இந்தியா ரசிகர்கள்தான் அதிக அளவில் திரண்டிருந்தனர்.



    போட்டியின்போது வர்ணனை செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ‘‘மைதானம் முழுவதும் ப்ளூ ஜெர்சியாகவும், இந்திய தேசியக் கொடியாவும் காட்சியளிக்கிறது. பச்சை கலரை பெரிய அளவில் பார்க்க முடியவில்லை’’ என்றார்.

    அவருடன் வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ‘‘ஆமாம், அதிகப்படியான டிக்கெட் விலை காரணமாக இருக்கலாம்’’ என்று கூலாக பதில் அளித்தார்.



    பாகிஸ்தான் தற்போது பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கான் வெளிநாடுகளுக்கு சென்று பொருளாதார உதவி கோரி வருகிறார்.

    இதை சுட்டுக்காட்டிதான் கங்குலி அவ்வாறு பதில் அளித்துள்ளார்.
    Next Story
    ×